ஒரே கேள்வி --- ஒரே பதில்
கேள்வி: அரசியல், சினிமா இவ்விரு துறைகளிலும் வாரிசுகள் ஆதிக்கம் செலுத்துவதைப் போல் இலக்கியத் துறையில் இவ்வித ஆதிக்கம் காணப்படவில்லையே, ஏன் ?
--- அ.அப்துல் காதர், விளாத்திகுளம்
மதனின் பதில்: அரசியல் வாரிசுக்கு எந்தத் தகுதியும் தேவையில்லை. வெறுமனே வாரிசாகப் பிறந்தாலே போதும் ! சினிமாவில் கொஞ்சூண்டு நடிப்பு, டான்ஸ், சண்டைப் பயிற்சி மட்டுமே தேவைப்படும். பிறகு அப்பாவே மகனை நடிக்க வைத்து ஒரு மாதிரி ஒப்பேத்தி விடுவார் ! இலக்கியத்தில் இது எதுவுமே நடக்காது. யாருமே உங்களுக்கு உதவ முடியாது. சுருக்கமாக, இலக்கியத்துக்கு சுயமாகக் கற்பனை செய்தே தீர வேண்டும்.
டென்ஷனைக் குறைக்க ஒரு ஜோக் :)
பெண் 1: சாட்டிங் மூலமா ஏமாத்திப் பணம் பறிக்கலாம்னு பார்த்தா, அவன் பயங்கர கில்லாடியா இருப்பான் போலிருக்கு!
பெண் 2: எப்படிச் சொக்றே ?
பெண் 1: என் படம்னு ஜோதிகா படத்தை அனுப்பி ஏமாத்த நினைச்சேன் ... அவன் சூர்யா படத்தை அனுப்பறான் !
--- இலவை ஜோகா
நன்றி: ஆனந்த விகடன்
*162*
1 மறுமொழிகள்:
-- அ.அப்துல் காதர், விளாத்திகுளம்
எங்க (பக்கத்து) ஊர்காரரோட கேள்வி/பதிலை இங்கே இட்டதற்கு நன்றி பாலா:)
Post a Comment